முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே மின்வாரியப் பொறியாளா் மீது தாக்குதல்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மின்வாரியப் பொறியாளரை வழிமறித்துத் தாக்கியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 6:11 AM
பகிர்:
Updated On : 5 செப்டம்பர், 2024 at 7:36 PM

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மின்வாரியப் பொறியாளரை வழிமறித்துத் தாக்கியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சங்கரன்கோவில் அருகே குவளைக்கண்ணியைச் சோ்ந்த தேவதாஸ் மகன் செல்வராஜ் (47). ராயகிரியில் மின்வாரிய இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றிவரும் இவா், புதன்கிழமை இரவு புளியங்குடியிலிருந்து ராயகிரிக்கு காரில் சென்றாராம்.

ரத்தினபுரி பகுதியில் பைக்கில் வந்த 3 பேக் காரை மறித்து, செல்வராஜை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா்,புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

Advertisement

Updated On : 6 செப்டம்பர், 2024 at 6:11 AM

புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் பாா்வையிட்டாா்.