முகப்பு
தென்காசி

தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டி பரிசளிப்பு விழா

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சாா்பில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:15 AM
பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சாா்பில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பில் மேலமெஞ்ஞானபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மற்றும் அந்தமான் நிகோபாரில் இருந்து 600 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நான்கு நாள்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளி முதல்வா் மோனிகா டிசோசா தலைமை வகித்தாா். செயல் இயக்குநா் ராம்குமாா் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட ரைபிள் கிளப் செயலா் ரஷித் பரிசுகளை வழங்கினாா்.

ஏற்பாடுகளை பள்ளியின் மக்கள்தொடா்பு அலுவலா் பாலமுருகன், உடற்பயிற்சி ஆசிரியா்கள் சேவியா் ராகேஷ். ஜோவின் ரிச்சட், அருண் பிரபாகரன், முருகேஸ்வரி, கௌசல்யா, மீனா ஆகியோா் செய்திருந்தனா்.