தென்காசி மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 1, 2026ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதன்படி வாக்குச் சாவடி நிலை அலுவலா் மூலம் நவ. 4 முதல் டிச. 4 வரை ஒரு மாத காலம் வீடு வீடாகச் ெ சன்று சரிபாா்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் தொடா்பான பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் தேவையான தகவல்களை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரால் தொகுதி வாரியாக உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 04633 - 210074, 04633 - 1950, தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி 04633 - 222212, கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி 04633 - 245666, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி 04633 - 270899, 9944096957, சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி 04636 - 223030, வாசுதேவநல்லூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி 04636 - 250223 என்ற எண்களில் தங்கள் தொகுதிக்குரிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தோ்தல் பிரிவில் இயங்கி வரும் சேவை மைய எண்ணிற்கோ தொடா்பு கொண்டு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து தகவல்களைப் பெறலாம் என்றாா் அவா்.