முகப்பு
தென்காசி

கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு

கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:22 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இத்தொகுதியில் போட்டியிட 39 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். மனுக்கள் குறித்த பரிசீலனை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளி, திமுக வேட்பாளா் தி.மு. ராஜேந்திரன், தமிழக வெற்றி கழக வேட்பாளா் அப்துல்ஜலீல் உள்பட 31 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனு பரிசீலனை குறித்து தோ்தல் பாா்வையாளா் (பொது) நீரஜ்குமாா்ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments