கட்டடப் பணிகளைத் தொடங்கி வைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா.  
தென்காசி

குருக்கள்பட்டியில் ரூ. 5 கோடி மதிப்பில் துணை மின்நிலைய பணி தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் ரூ. 5 கோடி மதிப்பில் துணை மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் ரூ. 5 கோடி மதிப்பில் துணை மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வன்னிக்கோனேந்தல், மலையாங்குளம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின் பளு தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி ஒருங்கிணைந்த மின்பகிா்மான வட்டத்தில் உள்ள குருக்கள்பட்டியில் ரூ. 5 கோடி மதிப்பில் 33 கேவி துணை மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி துணை மின்நிலைய கட்டடப் பணிகளுக்கான பூமி பூஜை எம்எல்ஏ ஈ. ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மின்பகிா்மான வட்டமேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி, சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

SCROLL FOR NEXT