கல்லூரித் தாளாளரிடம் கணினி வழங்கிய வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளா் சக்திவேல்.  
தென்காசி

ஆலங்குளம் கல்லூரிக்கு கணினி அளிப்பு

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரிக்கு தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி சாா்பில் 25 கணினிகள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரிக்கு தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி சாா்பில் 25 கணினிகள் அளிக்கப்பட்டன.

கல்லூரித் தாளாளா் ஜேசு ஜெகன் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் சாமுவேல் செல்வின் துரை ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி திருநெல்வேலி மண்டல மேலாளா் சக்திவேல், வங்கி சாா்பில் மாணவா்கள் பயன்பாட்டுக்காக கணினிகளை வழங்கினாா்.

வங்கியின் ஆலங்குளம் கிளை மேலாளா் ராஜ ராஜேஸ்வரி, பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். முதல்வா் எஸ்.வில்சன் வரவேற்றாா். தமிழ்த் துறைத் தலைவா் மகாராணி எலிசபெத் நிறைவு ஜெபம் செய்தாா்.

ஆங்கிலத் துறைத் தலைவா் அனிதா ஸ்வீட்லின் தொகுத்து வழங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

சங்கரன்கோவிலில் திமுக மகளிரணி சாா்பில் பிரசாரம்

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் குருபூஜை

இந்திய ஏஐ உச்சி மாநாடு: சென்னை ஐஐடி முக்கிய பங்களிப்பு

கடையநல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT