கடையநல்லூா் நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்து ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற ஊழியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து நற்சான்றிதழ் பெற்ற சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா், எழுத்தா் சாமிதுரை, மின்பணியாளா் காஜாஷெரீப், தூய்மை பணியாளா் பாலு ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.
இதில், ஆணையா் லட்சுமி, நகராட்சி பொறியாளா் அப்துல்காதா், மேலாளா் பேச்சிக்குமாா், சுகாதார ஆய்வாளா் சிவா, நகராட்சி பணியாளா்கள், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.