திருநெல்வேலி

ஆலங்குளத்தில் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டத்தில்,நடப்பு கல்வியாண்டியில்,மாவட்டத்தில் முதன் முறையாக ஆலங்குளத்தில்,பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அரசு

V.RAMACHANDRAN

திருநெல்வேலி மாவட்டத்தில்,நடப்பு கல்வியாண்டியில்,மாவட்டத்தில் முதன் முறையாக ஆலங்குளத்தில்,பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி தலைமை வகித்தார். தொழிலாளர் நல வாரியம் துணை ஆணையர் டி.ஜாப்பிரின்ஸ் முன்னிலை வகித்தார். அ.வைகுண்டராஜா,ஏ.அமீர்கான்,எம்.ராஜாங்கம்,எஸ்.காசிவிஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதற்கான வங்கி கணக்கு புத்தகத்தை வழங்கி ராமசுப்பு எம்.பி பேசியதாவது:

மத்திய அரசு பீடித்தொழிலாளர்களின் குழந்தைகள் நல்லதொரு கல்வியை கற்க ஏதுவாக இத்தகைய கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.இந்த ஆண்டில் தமிழகத்தில் உள்ள 2345 பள்ளிகளில் 1,22,370 மாணவர்களுக்கு ரூ.16.50 கோடி வழங்கப்படுகிறது.அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1819 பள்ளிகளில்,1,17,447 மாணவர்களுக்கு மட்டும் ரூ.15.50 கோடி வழங்கப்படுகிறது. ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1085 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் கனராவங்கி துணை மேலாளர் கணேசன்,அப்பாத்துரை, எஸ்.அருமைநாயகம்,பீடித்தொழிலாளர் நல மருந்தக மருத்துவர்கள்  சுந்தரராஜன்,பெர்னட்,சகாயமேரி,பிரியாசுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக பள்ளித்தலைமை ஆசிரியர் ரே.கனகம் வரவேற்றார்.ஆசிரியர் பி.சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.ஆசிரியர் ஜாண்சன் தொகுத்து வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!

ராஜஸ்தானில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 42 லட்சம் பேர் நீக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT