முகப்பு
திருநெல்வேலி

10ம் வகுப்பு தேர்வு: கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பள்ளிகள் 100% தேர்ச்சி

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:59 AM
பகிர்:

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 173 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் மாணவி எம்.ஆயிஷா சபீகா 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 98, ஆங்கிலம் 96, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 100.

மாணவி எஸ்.சீதாலெட்சுமி 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.

அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 96, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 99. மாணவி ஆர்.மெர்லின் ஜெபலிம்சா 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 99. மாணவர்களுக்கு பள்ளி நிறுவனர் மங்கையர்கரசி, தாளாளர் சாமுவேல்ஞானமுத்து பாராட்டினர்.

 கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 26 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவன் பா. ஹரிதேவமுத்து 500 க்கும் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 96, ஆங்கிலம் 96, கணிதம் 96, அறிவியல் 100, சமூக அறிவியல் 98.

மாணவி எம். ஐஸ்வர்யா 477 மதிப்பெண்கள் பெற்று 2 ம் இடம் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 92, ஆங்கிலம் 94, கணிதம் 94, அறிவியல் 100, சமூக அறிவியல் 97. மாணவி ஜி. கார்த்திகா, மாணவன் எம். ஐசக்ராஜசேகர் 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3 வது இடம் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு முதல்வர் புனிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்

முழு கட்டுரையைப் படிக்க →