திருநெல்வேலி

காவல் துறை அதிகாரிகளுடன் தென் மண்டல ஐ.ஜி. ஆலோசனை

DIN

ஒன்பது மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐ.ஜி. எஸ். முருகன் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 9 மாவட்டங்கள் அடங்கிய தென் மண்டல அளவிலான மாவட்ட கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணைக் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென் மண்டல ஐ.ஜி. தலைமை வகித்தார். காவல் துறை சரக துணைத் தலைவர்கள் அனந்தகுமார் சோமானி (மதுரை), ஜி. கார்த்திகேயன் (திண்டுக்கல்), கபில்குமார் சி சாரக்கர் (ராமநாதபுரம்), காவல் கண்காணிப்பாளர்கள் வா. விக்ரமன் (திருநெல்வேலி), அஸ்வின் கோட்னீஸ் (தூத்துக்குடி), ஜி. தர்மராஜன் (குமரி), விஜயேந்திர பிதாரி (மதுரை), எம். ராஜேந்திரன் (விருதுநகர்), ஏ. சரவணன் (திண்டுக்கல்), வி. பாஸ்கரன் (தேனி), டி. ஜெயச்சந்திரன் (சிவகங்கை), என். மணிவண்ணன் (ராமநாதபுரம்), கூடுதல் எஸ்.பி.க்கள் வி.ஆர். சீனிவாசன், மகேஸ்வரன், ஏ.எஸ்.பி.க்கள் எஸ். சர்வேஸ்ராஜ், ஜி. சுகுணாசிங், எஸ். செல்வநாகரத்தினம், அபிநவ், சாய்சரண் தேஜாஸ்ரீ, டி.எஸ்.பி.க்கள் வனிதா, டி. குமார், கே. சரவணகுமார் பி. பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது, துப்பு துலங்காமல் இருக்கும் பல்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிதி அளிப்பு: இதனைத் தொடர்ந்து கொலை, பாலியல் வன்கொடுமை, கொடுங்காயம் போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு ரூ. 1.40 லட்சத்துக்கான காசோலையை தென்மண்டல ஐ.ஜி. வழங்கினார். காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT