திருநெல்வேலியில் கவிஞர் ரவிசுப்பிரமணியனுக்கு தி.க.சி. இயற்றமிழ் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நந்தா விளக்கு சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர் கவிஞர் பா. தேவேந்திரபூபதி தலைமை வகித்தார். விழாவில், திருலோகம் என்றொரு கவி ஆளுமை எனும் ஆவணப்படத்தை எழுதிய இயக்கியுள்ள கவிஞர் ரவி சுப்பிரமணியனுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் ஆகியோர் தி.க.சி. இயற்றமிழ் விருது வழங்கிப் பாராட்டினர். கவிஞர் பிருந்தாசாரதி, தமிழ்வளர்ச்சி பண்பாட்டு மையத் துணைத் தலைவர் தி.த. ரமேஷ்ராஜா, மருத்துவர் ராமகுரு, மனநல மருத்துவர் ராமானுஜம், எழுத்தாளர்கள் வே. முத்துக்குமார், கிருஷி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
ஸ்ரீஜெயந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வர் உஷாராமன், ராம்குமார், தச்சை கணேசராஜா, கோடீஸ்வரன் மணி, எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
ரவிசுப்பிரமணியன் ஏற்புரையாற்றினார். எழுத்தாளர் தி. சுபாஷினி வரவேற்றார். எழுத்தாளர் சீனி. குலசேகரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.