திருநெல்வேலி

நெல்லை அருகே மந்திரவாதி வெட்டிக் கொலை

DIN

திருநெல்வேலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மந்திரவாதி சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலச்செவலைச் சேர்ந்த சண்முகவேல் மகன் சுந்தரராஜ் (36). கட்டடத் தொழிலாளி. இவர் மாந்திரீகத் தொழிலும் செய்து வந்தாராம். பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (30). அங்கு ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இருவரும் நண்பர்கள். சுந்தர்ராஜ், ரெட்டியார்பட்டி 2 ஆவது கீழத்தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.
முத்துகிருஷ்ணன் வீட்டில் கோழி வளர்ப்பதாக, சுந்தரராஜ் கூண்டு கட்டும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டாராம். மாலையில் கூண்டுக்கு தேவையான பொருள்களை மோட்டார் சைக்கிளில் சுந்தரராஜூம், முத்துகிருஷ்ணனும் வாங்கிக் கொண்டு ரெட்டியார்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனராம். புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் சுந்தரராஜை வழி மறித்து அரிவாளால் வெட்டினராம். அப்போது உடன் சென்ற முத்துகிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டாராம். இதில், பலத்த காயமடைந்த சுந்தரராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மாநகர காவல் உதவி ஆணையர் விஜயகுமார், காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரெட்டியார்பட்டி எஸ்.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ் (17), பண்டாரம் மகன் வெற்றிவேல் (27) ஆகியோரின் தந்தை அண்மையில் இறந்து விட்டனராம். இருவரின் தந்தையையும் சுந்தரராஜு தான் மாந்திரீகம் வைத்து கொன்றுவிட்டதாக கருதி தினேஷ், வெற்றிவேல், ஜெகன் ஆகிய மூவரும் இணைந்து சுந்தரராஜை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT