திருநெல்வேலி

அரியநாயகிபுரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

DIN

திருநெல்வேலி மாவட்டம், அரியநாயகிபுரம் அருகேயுள்ள  பொட்டல் காலனியில் குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பொட்டல் காலனி நடுத்தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் வெற்றிவேல் (22). சென்னையில் ஒரு ஹோட்டலில் எலக்ட்ரீசியனாக பணியாற்றினார்.
இவருக்கும்,  அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவில் இசக்கி என்பவரது மகள் இஷா(25) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. பின்னர், தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு  தனது தாய் வீட்டிற்கு இஷா சென்று விட்டாராம். வெற்றிவேலும் சென்னைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த 10ஆ ம் தேதி சென்னையில் இருந்து வந்த வெற்றிவேல்,  மறுநாள்  (ஜூலை 11)  மன்னார்கோவிலுக்குச் சென்று மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தாராம். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இஷா மீண்டும் தனது தாய் வீட்டிற்கு 13ஆம் தேதி திரும்பிச் சென்றுவிட்டாராம் .
மேலும்,  அவர் அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தாராம். போலீஸார் விசாரித்து,  கணவர் தரப்பில் பெறப்பட்ட திருமண சீர்வரிசை பொருள்களை பெண் வீட்டாரிடம் திரும்ப வழங்க வேண்டும். அதை முக்கூடல் போலீஸார் உதவியுடன் சென்று பெண் வீட்டார் பெற்று கொண்டு,  நீதிமன்றம் மூலம் இறுதித் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர்.
இதனிடையே, திங்கள்கிழமை பிற்பகல் இஷா, அவரது தாய் சுடலை மாடி , அண்ணன் மாரிமுத்து மற்றும் உறவினர்கள் 2 பேர் வெற்றிவேல் வீட்டிற்குச் சென்றனராம்.  அப்போது, வெற்றிவேலை மாரிமுத்து தனியாக அழைத்துப் பேசினாராம். இதில், தகராறு ஏற்பட்டு மாரிமுத்து தான் மறைத்து வத்திருந்த அரிளால் வெற்றிவேலை வெட்டிவிட்டு தப்பினாராம்.
இதில், பலத்த காயமடைந்த வெற்றிவேல் அதே இடத்தில் உயிரிழந்தார். முக்கூடல் போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிந்தனர்.  மேலும், தலைமறைவான இஷா குடும்பத்தினரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT