எல்.ஐ.சி. முகவர்கள் மாநாடு விழிப்புணர்வு பிரசார பயண ஊர்தி சங்கரன்கோவிலில் இருந்து கலை நிகழ்ச்சிகளுடன் புதன்கிழமை தொடங்கியது. இந்த ஊர்தி 3 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் 3 ஆவது தமிழ் மாநில மாநாடு இம்மாதம் 22 ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.
இதையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசார பயண ஊர்தி புதன்கிழமை சங்கரன்கோவிலில் தாமிரபரணி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் மு.சு. மதியழகன், சங்கர், புலவர் த. மாரியப்பன் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. பின்னர் ராஜபாளையம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்க சங்கரன்கோவில் கிளைத் தலைவர் மூக்கையா, செயலர் கணேசன், துணைச் செயலர் சி.கே. குமார், பொருளாளர் பெருமாள்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து புளியங்குடி செல்லும் பிரசார ஊர்தி அங்கிருந்து தென்காசி, கடையம் வழியாக திருநெல்வேலி சென்றடைகிறது. அதைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.