முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக 142 மி.மீ. மழை பொழிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக 142 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக 142 மி.மீ. மழை பொழிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக 142 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக 142 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி அணைகளுக்கு நீர்வரத்து (விநாடிக்கு): பாபநாசம், சேர்வலாறு  2,054.53 கனஅடி, மணிமுத்தாறு 1,457  கனஅடி, கடனாநதி 245 கனஅடி, ராமநதி 65 கனஅடி, கருப்பாநதி 98 கனஅடி, குண்டாறு 31 கனஅடி, அடவிநயினார் 46 கனஅடி, வடக்குப் பச்சையாறு 105 கனஅடி, நம்பியாறு  35 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 100 கனஅடி.
நீர்மட்டம்: பாபநாசம் அணை நீர்மட்டம் (3 அடி உயர்ந்து) 96.65 அடி,  சேர்வலாறு அணை (2 அடி உயர்ந்து) 109.61 அடி, மணிமுத்தாறு அணை (2 அடி உயர்ந்து) 75.80 அடி, கடனாநதி அணை (2 அடி உயர்ந்து) 74.20 அடி, ராமநதி அணை (ஓரடி உயர்ந்து) 65.50 அடி, கருப்பாநதி அணை (2 அடி உயர்ந்து) 66.28 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 98 அடி, வடக்குப் பச்சையாறு அணை (4 அடி உயர்ந்து) 25 அடி, நம்பியாறு அணை  22.96 அடி, கொடுமுடியாறு அணை 52.50 அடி.
பாசனத்துக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 304.75 கனஅடி,  கடனாநதி அணையிலிருந்து 60 கனஅடி, ராமநதி, குண்டாறு அணைகளிலிருந்து தலா 35 கனஅடி, அடவிநயினார் அணையிலிருந்து 70 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் நம்பியாறு அணைக்கு வந்துகொண்டிருந்த 35 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு வந்து கொண்டிருந்த 100 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
142 மி.மீ. மழை பதிவு: புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-41, பாபநாசம் கீழ் அணை-56, சேர்வலாறு அணை-37, மணிமுத்தாறு அணை-10.8, கடனாநதி அணை-5, ராமநதி அணை-30, கருப்பாநதி அணை-37, குண்டாறு அணை-28, அடவிநயினார் அணை-15, நம்பியாறு அணை-13, கொடுமுடியாறு அணை-5, கன்னடியன் அணைக்கட்டு-38.4,  திருநெல்வேலி-7.4, பாளையங்கோட்டை-9, நான்குனேரி-26, ராதாபுரம்-
22, சேரன்மகாதேவி-14.4, அம்பாசமுத்திரம்-47.8, ஆலங்குளம்-22.4, தென்காசி-15.8, செங்கோட்டை-26, ஆய்க்குடி-22, சங்கரன்கோவில்-42, சிவகிரி-29.
பருவ மழை தொடங்கிய பின்னர், நவ. 1 முதல் 7வரை இம்மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், பிற பகுதியிலும் சராசரியாக 142 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →