முகப்பு
திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் தமிழ்ப்பேரவை தொடக்க விழா

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை தமிழ்ப் பேரவை தொடக்க விழா மற்றும் நிலா முற்றம் மாணவர் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை தமிழ்ப் பேரவை தொடக்க விழா மற்றும் நிலா முற்றம் மாணவர் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு,  தமிழ்த் துறைத் தலைவர் சு. சிவசங்கர் தலைமை வகித்தார்.  மாணவிகள் சந்தியா, கார்த்திகா கலைவாணி ஆகியோர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினர்.  மாணவர்கள் தயார் செய்த  நிலாமுற்றம் இதழை கல்லூரி முதல்வர் சி.அழகப்பன் வெளியிட்டார். அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய அம்பாசமுத்திரம் ஒருங்கிணைப்பாளர் ச.பூங்குன்றன் இதழைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து இன்றைய இளைஞர்கள் செல்லும் பாதை வெல்லும் பாதையா வீழும் பாதையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பணி நிறைவு பேராசிரியர் சு.சக்திவேலு நடுவராகப் பணியாற்றினார்.  மாணவிகள் சுபித்ரா, சிந்துஜா, பார்வதி,  சங்கரேஸ்வரி ஆகியோர் வாதிட்டனர்.  மாணவி ரேவதி வரவேற்றார்.  மாணவி நேசபிரின்சி நன்றி கூறினார்.
மாணவர் குணசேகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.  தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் விஜயா,  பாக்கியமுத்து,  ஸ்ரீஜெயந்தி,  கண்ணகி,  கவிதா,  ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை தமிழ்த் துறையினர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →