முகப்பு
திருநெல்வேலி

தரமற்ற பூச்சிக் கொல்லிலி மருந்துகள்: விவசாயிகள் வேதனை

உரக்கடைகளில் விற்கப்படும் தரமற்ற பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் உரங்களால் பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

உரக்கடைகளில் விற்கப்படும் தரமற்ற பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் உரங்களால் பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் 3 பருவங்களாக விவசாயம் செய்யவில்லை.  மேலும் அணைகளில் தொடர்ந்து தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதாலும்,  மழைப் பொழிவு குறித்து உறுதியான நிலை இல்லாததாலும் பலர் தற்போதும் விவசாயம் செய்யாமல் உள்ளனர்.  இந்நிலையில் கிணறு உள்ளவர்கள் மற்றும் சில விவசாயிகள் அணைகளிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரைக்  கொண்டு சிறுகிழங்கு உள்ளிட்ட நீர் தேவை குறைந்த பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
 இந்த நிலையில் கடைகளில் விற்பனை செய்யப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள்,  உரங்கள் உள்ளிட்டவை தரம் குறைந்ததாக உள்ளதால் பொருள் செலவு அதிகமாக உள்ளதாகவும்,  இதனால் போதிய லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி கூறியதாவது:
கடந்த  மூன்று பருவமாக பயிர் செய்ய முடியாத நிலை எற்பட்டது.  மழை வருவதையும் உறுதி செய்ய முடியாத நிலையில் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட குறைந்த அளவு தண்ணீருக்கு ஏற்ப சுமார் 3 ஏக்கரில் சிறுகிழங்கு பயிரிட்டுள்ளேன்.   இதில்,  நாற்றுநடும் வரை ஏக்கருக்கு சுமார் ரூ. 25 ஆயிரம் செலவாகிறது.  
அதன்பின் செடிகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த,  பூச்சிக் கொல்லி,  களைக் கொல்லி என்று மருந்துகள் வாங்கி பயன்படுத்தினால் அதற்கு புழுக்களும்,  பூச்சிகளும் அழிவதில்லை.  
15 நாள்களுக்கு ஒருமுறை மருந்து தெளிக்கும் நிலையில்  தற்போது 3 நாள்களுக்கு ஒருமுறை மருந்து தெளித்தும் புழுக்கள் சாகவில்லை.   தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயம் செய்தால் உரம்,  பூச்சிக் கொல்லி மருந்துகள் தரம் இல்லாததால் மேலும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.   இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து தரமான உரம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →