திருநெல்வேலி

தசரா விழா: காவல்துறை கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

தசரா விழாவில் காவல்துறை கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென  இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல பொதுச் செயலாளரும், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவருமான கார்த்தீசன் வலியுறுத்தியுள்ளார்.

DIN

தசரா விழாவில் காவல்துறை கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென  இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல பொதுச் செயலாளரும், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவருமான கார்த்தீசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக   தென்மண்டல காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள  மனு:   
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவுக்கு பக்தர்கள் 90 நாள்கள் விரதமிருந்து மாலையிட்டு வேடமணிந்து காணிக்கை பிரித்து ஆலயத்திற்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். இதுவரை பொதுமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ தசரா பக்தர்களால் இடைஞ்சல் இருந்தது இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் மேளம் அடித்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை. ஆகவே நெல்லை மாவட்டத்திலும் மேளம் அடித்துச் செல்ல அனுமதியளிக்கவேண்டும்.   
காளி வேடம் அணிந்தவர்கள் கிரீடம் மற்றும் நீண்ட கைகளுடன் பேருந்தில் பயணம் செய்ய இயலாது.
ஆகவே திறந்த வெளி வாகனத்தில் தசரா பக்தர்கள் பயணம் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டை  வேண்டும். தவறும் பட்சத்தில் செப். 26-ஆம் தேதி  இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் திசையன்விளையில் தசரா பக்தர்களை ஒருங்கிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT