முகப்பு
திருநெல்வேலி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, திருநெல்வேலியில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:10 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, திருநெல்வேலியில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ரமேஷ், அமைப்பின் நிர்வாகிகள் மாரிமுத்து, பேச்சிமுத்து, பேச்சிராஜா, அப்துல்ஜப்பார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக விவசாயிகள் நலன்கருதி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை திரும்பப் பெற வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்; வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்திருக்கும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.