திருநெல்வேலி

நெல்லை கூட்டுறவு வங்கியில் 100ஆவது ஆண்டு நிறைவு விழா

DIN

திருநெல்வேலியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 100ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
ராவ்சாகிப் மேடை தளவாய் திருமலையப்ப முதலியார் தலைமையில் 1918 ஆம் ஆண்டு ஏப். 12 இல்  இந்த வங்கி தொடங்கப்பட்டது. இம்மாதம் 12 ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி  நடைபெற்ற இவ்விழாவுக்கு,  வங்கியின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட இணைப்பதிவாளருமான சி. குருமூர்த்தி தலைமை வகித்து பேசியது:
இம்மாவட்டத்தில் 30 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு அறிவிக்கும் கடன், மகளிர் சிறு வணிகக்கடன், வியாபாரக் கடன், பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
விழாவுக்கு, வங்கியின் முதன்மை வருவாய் மேலாளர் ஆ. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எம்.ஆர்.கே. குமாரசாமி குத்துவிளக்கு ஏற்றினார். வங்கியின் இயக்குநர் சிவசுப்பிரமணியன், துணைப் பதிவாளர் தொண்டிராஜ், உதவிபொதுமேலாளர் முத்துச்செல்வம், மேலாளர் முருகராஜ் மற்றும் ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள் கௌரவிக்கப்பட்டனர். 
கூட்டுறவு தணிக்கை அலுவலர் ரவிஅருணாசலம், வங்கிப் பணியாளர்கள் செந்தில்வேல் சுப்பிரமணியன், சுந்தர்ராஜன், முத்துலட்சுமி, சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுமேலாளர் சி. பாஸ்கரன் வரவேற்றார். உதவிபொதுமேலாளர் நயினார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT