திருநெல்வேலி

தாமிரவருணி உபரிநீரை குளங்களுக்கு திருப்பிவிட பாஜக வலியுறுத்தல்

DIN

தாமிரவருணி நதியில் உபரியாக செல்லும் நீரை பாசனக் குளங்களுக்கு திருப்பிவிட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் அ. தயாசங்கர், மாநில விவசாய அணிச் செயலர் கே. கணேஷ்குமார்ஆதித்தன் ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை ஆட்சியரிடம் அளித்த மனு:
தாமிரவருணி பாசனத்தில் வழக்கமாக வடகிழக்குப் பருவகாலத்தில்தான் கூடுதலாக மழை பெய்யும். நிகழாண்டு தென்மேற்குப் பருவத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட 9 அணைகள் நிரம்பியுள்ள நிலையில், உபரிநீர் தாமிரவருணி ஆறு, சிற்றாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களாக தாமிரவருணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
விநாடிக்கு சராசரியாக 1500 மில்லியன் கனஅடி உபரியாக கடலுக்கு செல்வதாக கூறப்படுகிறது. உபரிநீர் சுமார் 6 டி.எம்.சி. கடலுக்கு சென்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மழையால் வெள்ளம் ஏற்பட்ட போதிலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. மேலும், இந்த பாசனத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பவில்லை. குறிப்பாக, மானூர் பெரியகுளம், விஜயநாராயணம் உள்ளிட்ட குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை வறட்சியான பகுதிக்கு திருப்பிவிடும் வகையில், 2009 இல் தொடங்கப்பட்ட தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தற்போது தாமிரவருணி ஆற்றில் வீணாக செல்லும் உபரிநீரை குளங்களில் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் திருப்பிவிட வேண்டும். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாக தூர்ந்து காணப்படும் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை தரும் தண்ணீரை வீணாக்காமல் சேமித்து, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவர் பால்பாண்டி, பொதுச் செயலர் கேபிள் பணிநாதன், மாநில இளைஞரணி செயலர் வேல். ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT