முகப்பு
திருநெல்வேலி

அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

பாளை. யில் பேருந்தின் மீது கல்வீசிய மர்மநபர்களை போஸீஸார் தேடி வருகின்றனர். 

Updated On : 9 ஜூலை, 2018 at 7:33 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பாளை. யில் பேருந்தின் மீது கல்வீசிய மர்மநபர்களை போஸீஸார் தேடி வருகின்றனர். 
திருச்செந்தூரில் இருந்து ராஜபாளையத்துக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி அருகே இரவில் வந்தபோது,  எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென பேருந்து மீது கல்லை வீசினர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்தது. எனினும் பேருந்தில் ஒரு பயணி மட்டுமே இருந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநர் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போஸீஸார் வழக்குப் பதிவு செய்து, பேருந்தின் மீது கல்வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.