போலீஸார் குவிப்பு
ஜான் பாண்டியன் வீட்டின் மீது குண்டு வீசி அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஜான் பாண்டியன் வீட்டின் மீது குண்டு வீசி அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மகேந்திர குமார் ரத்தோர், பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் ராமையா மற்றும் போலீஸார் சென்றனர். அவர்கள் சம்பவம் குறித்து பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸார் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவியது. இதையடுத்து அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக ஜான் பாண்டியன் வீடு முன்பு அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.