முகப்பு
செய்திகள்

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து...

Updated On : 16 ஏப்ரல் 2026, 8:53 pm IST
பள்ளிச்சட்டம்பி போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு அறிவித்துள்ளது.

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் வெளியான புதிய திரைப்படம் “பள்ளிச்சட்டம்பி”.

நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், பிரசாந்த் அலெக்ஸாண்டர், வினோத் கெடமங்களம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

1980-களில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை காப்பதற்காக சில கிறிஸ்துவர்களால் ஊருக்குள் அழைத்து வரப்படும் சண்டியரான நாயகனின் கதையாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

பள்ளிச்சட்டம்பி திரைப்படம் புதன்கிழமை (ஏப். 15) மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்த நிலையில், பள்ளிச்சட்டம்பி படம் ஒரே நாளில் 10.34 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

summary

The film crew has announced the first-day box office collection details for the movie Pallisattambi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments