FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஸ்பைடர்மேன் வசூல் சாதனை! பட்ஜெட் ரூ. 2,140 கோடி... இரு நாள்களில் ரூ. 1,650 கோடி!

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படம் இரு நாள் வசூல் குறித்து...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:19 pm IST
ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே - யூடியூப்
பகிர்:

மார்வெல் ஸ்டூடியோஸின் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படம் இரு நாள்களில் ரூ. 1,650 கோடி வசூலித்துள்ளது.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 31) வெளியானது. ஆனால், சிறப்புக் காட்சியாக இந்தியாவில் வியாழக்கிழமையிலேயே (ஜூலை 30) வெளியானது.

மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும், எம்சியூவின் ஸ்பைடர்மேன் சீரியஸின் 4வது படமாகவும் வெளியாகியிருக்கும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படம், 225 மில்லியன் டாலர் செலவில் (சுமார் ரூ. 2,146 கோடி) உருவாக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே, இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ. 72.44 கோடி வசூலித்து, இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்தது. இந்தியாவில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமையில் இந்தப் படத்துக்கு மட்டும் 16,902 காட்சிகள் ஒதுக்கப்பட்டன. இந்தியாவில் இரு நாள்களில் மட்டும் ரூ. 131.46 வசூலித்துள்ளது.

மேலும், உலகெங்கிலும் வெள்ளிக்கிழமையில் வெளியான நிலையில், இதுவரையில் 173 மில்லியன் டாலர் வரையில் (சுமார் ரூ. 1,650 கோடி) வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்புச் செலவில் 77 சதவிகிதத்தை இரு நாள்களிலேயே ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே வசூலித்துள்ளது.

summary

Tom Holland's Spider-Man Brand New Day Box Office Collections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments