முகப்பு
திருநெல்வேலி

புதிய பேருந்து நிலைய கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வே புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருநெல்வே புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் நா. முருகப்பிரசன்னா, பா. சவரிசன், பெ. சூரியன், ரா. செந்தில்குமரன், பா. சொக்கலிங்கம், எஸ்.இ. மோகன், த. முருகேசன் மற்றும் இ. ஹிஜின்பெலிக்ஸ் கூட்டாய்வு செய்தனர்.   120 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், வியாபார நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த 10 மின்னணு  தராசுகள்,  கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பொட்டலப் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்புடைய வணிகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதுபோன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →