முகப்பு
செய்திகள்

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை பற்றி..

Updated On : 16 மார்ச், 2026 at 5:06 AM
ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
பகிர்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படம் வென்றுள்ளது.

இந்திய நேரடிப்படி, திங்கள்கிழமை காலை 4.30 மணியளவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், 98-வது அகாதெமி விருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. விழாவில், 2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அதில், ஒன் பேட்டில் ஆஃப்டர் ஆனதர் திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று, ஆஸ்கர் விருதுகள் விழாவில் இந்த திரைப்படக் குழுவினர் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தனர்.

1. சிறந்த திரைப்படம் (Best Picture): ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another)

2. சிறந்த இயக்குநர் (Best Director): பால் தாமஸ் ஆண்டர்சன் (Paul Thomas Anderson) – One Battle After Another

3. சிறந்த துணை நடிகர் (Best Supporting Actor): சீன் பென் (Sean Penn) – One Battle After Another

4. சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay): பால் தாமஸ் ஆண்டர்சன் – One Battle After Another

5. சிறந்த காஸ்டிங் (Best Casting - முதல் முறையாக அறிமுகம்): கசாண்ட்ரா குலுகுண்டிஸ் (Cassandra Kulukundis) – One Battle After Another

6. சிறந்த திரைப்படத் தொகுப்பு (வார்னர் பிரதர்ஸ்) ஆன்டி ஜர்கென்சென்

ஆகிய ஆறு விருதுகளைக் குவித்திருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →