கீழாம்பூரில் ரயிலிலில் அடிபட்டு ஒருவர் சாவு
கீழாம்பூரில் செங்கோட்டை பயணிகள் ரயிலில் ஒருவர் அடிப்பட்டு உயிரிழந்தார்.
கீழாம்பூரில் செங்கோட்டை பயணிகள் ரயிலில் ஒருவர் அடிப்பட்டு உயிரிழந்தார்.
திருநெல்வேலியிலிருந்து புதன்கிழமை பிற்பகலில் செங்கோட்டை சென்ற பயணிகள் ரயில் 3.10 மணிக்கு கீழாம்பூரிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்று கொண்டிருக்கும் போது ரயில்வே கேட் அருகே ரயிலில் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தாராம்.
இது குறித்து தகவலறிந்ததும் தென்காசி ரயில்வே போலீஸார் முருகேசன், நாடாக்கண்ணு மற்றும் கீழாம்பூர் கிராம நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.