திருநெல்வேலி

தீபாவளி பண்டிகை நள்ளிரவு வரை கடைகள் திறக்க அனுமதிக்க வலியுறுத்தல்

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் நள்ளிரவு வரை அனைத்து வணிக நிறுவனங்களும் திறந்து விற்பனை செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் எம்.ஆர். குணசேகரன் தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள், வடக்கு ரதவீதி அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகி எஸ். குமரேசன், பேரமைப்பின் இணைச் செயலர் ஜெ. நயன்சிங் ஆகியோர், மாநகர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அளித்த மனு; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 22ஆம் தேதி முதல் வருகிற நவ. 4ஆம் தேதி வரை நள்ளிரவில் 2 மணி வரையிலும்,  நவ. 5 ஆம் தேதி இரவு முழுவதும் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் திறந்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT