முகப்பு
திருநெல்வேலி

சிவந்திப்பட்டி அருகே  மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

சிவந்திப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:03 AM
பகிர்:

சிவந்திப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி நல்லமாடி (30). கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சிவந்திப்பட்டி அருகே குத்துக்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.  அப்போது, நல்லமாடி எதிர்பாராமல் கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  உயிரிழந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.