முகப்பு
திருநெல்வேலி

ஜவாஹர்நகர் சகாய அன்னை தேவாலய திருவிழா கொடியேற்றம்

பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனி, ஜவாஹர்நகரில் உள்ள அருள்நிறை சகாய அன்னை தேவாலயத் திருவிழா கொடியேற்றம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:01 AM
பகிர்:

பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனி, ஜவாஹர்நகரில் உள்ள அருள்நிறை சகாய அன்னை தேவாலயத் திருவிழா கொடியேற்றம் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட முதன்மை குரு கில்லாரியுஸ் தலைமை வகித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை தியானம் நடைபெற்றது. இம் மாதம் 7 ஆம் தேதி மாலையில் நற்கருணை பெருவிழாவும், 8 ஆம் தேதி அன்னையின் பிறந்த நாள் பெருவிழாவும், இரவு 7 மணிக்கு அசன விருந்தும் நடைபெற உள்ளது. 9 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் நன்றியின் பெருவிழாவில் பேராயர் அந்தோனி பாப்புசாமி பங்கேற்கிறார். 15 ஆம் தேதி ரெட்டியார்பட்டியில் உள்ள வேளைநகர் தோட்டத்தில் தாய்மையின் திருவிழா நடைபெற உள்ளது. 
விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ம.அருள்அம்புரோசு, உதவிப் பங்குத்தந்தை கு.ஜேக்கப் அமல ப்ரினீத் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.