நெல்லையில் செப். 14இல் புகைப்படம், விடியோ கலைப் பயிற்சி
புகைப்படம், வீடியோ எடுப்பது குறித்து இளைஞர்களுக்கான இலவச பயிற்சி முகாம் திருநெல்வேலியில் இம்மாதம் 14 இல் தொடங்குகிறது.
புகைப்படம், வீடியோ எடுப்பது குறித்து இளைஞர்களுக்கான இலவச பயிற்சி முகாம் திருநெல்வேலியில் இம்மாதம் 14 இல் தொடங்குகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் வி. குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஆண்கள், பெண்களுக்கு, கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சுயதொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் இலவசப் பயிற்சி இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
19 முதல் 35 வயதுக்குட்பட்ட, வறுமை கோட்டிற்கு கீழுள்ள கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் இம்மாதம் 10 ஆம் தேதிக்குள் திருநெல்வேலி, மகராஜநகரில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0462 2574265, 0462 2572453 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.