திருநெல்வேலி

கல்வியில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசு

DIN


திருநெல்வேலியில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மகா சேமம் அறக்கட்டளை சார்பில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 24 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் தலைமை வகித்து பரிசுகள் வழங்கிப் பேசியது:
அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நீங்கள், வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளீர்கள். மாணவர்கள் முன்னேற்றம் பெறுவதற்கு பொருளாதாரம் ஒரு தடை அல்ல என்று நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். கல்விதான் உங்களுக்கு அடையாளத்தைத் தருகிறது. மருத்துவராக, பேராசிரியராக, எழுத்தாளராக நீங்கள் உருவாகப் போகிறீர்கள். அப்போது, நீங்கள் பல தடைகளை தாண்டியிருப்பீர்கள். அன்று நீங்கள் அன்பையும், உலக நலனையும் விதைத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறை தலைவர் ச. மகாதேவன், ஆயுள் காப்பீட்டுக் கழக பாளையங்கோட்டை கிளை மேலாளர் சங்கர், பேராசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம், 2 ஆம் இடம்பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், 3 ஆம் இடம்பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 2,500 வீதம் 24 மாணவர்களுக்கு ரூ. 1.70 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT