திருநெல்வேலி

ஆலங்குளம் அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

DIN

ஆலங்குளம் அருகே  கிணற்றில் இருந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
ஆலங்குளம் அருகே உள்ள தாழையூத்தில் நல்லூரைச் சேர்ந்த மதிவாணன் என்பவருக்குச் சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ளே பாறையில் மலைப்பாம்பு இருப்பதை அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை கண்டனராம். 
இதுகுறித்து ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் நிலைய அலுவலர் ஜெயராமன், முதுநிலை தீயணைப்பாளர் ஷேக் உதுமான், குமரேசன், பசுங்கிளி மற்றும் வீரர்கள் வெள்ளைத்துரை, தங்கதுரை, முத்துராஜ், முருகன், மாரி கிருஷ்ணன் அடங்கிய குழுவினர் சுமார் 45 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பாம்பை உயிருடன் மீட்டனர். 
பின்னர் இதுகுறித்து ஆலங்குளம் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனக்காவலர் கோயில்பாண்டி, வேட்டைத் தடுப்பு காவலர் முருகன் ஆகியோரிடம் மலைப்பாம்பை அவர்கள் உயிருடன் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை பாபநாசம் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT