திருநெல்வேலி

மடிக்கணினி திருட்டு: 4 பேர் கைது

DIN

ஆலங்குளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்து கையடக்க மடிக்கணினியைத் திருடிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள கரும்பனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயனாளிகளின் விவரங்கள் குறித்து பயன்படுத்தும் பொருட்டு செவிலியர்களுக்கு அரசு கையடக்க கணினி (டேப்) வழங்கியுள்ளது. இதில் கர்ப்பிணிகள் குறித்த தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தனவாம். 
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு இந்த கையடக்க கணினியை காணவில்லையாம்.  இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்ததில்,
அவர்கள் கரும்பனூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் காளத்திமடம்  ராஜேந்திரன் மகன் ராமதாஸ் (24), சீனி காளை மகன் அசோக் (34), நல்லூர் வேலாயுதம் மகன் வைத்திலிங்கம் (32) ஆகியோர் என்பதும்,  இவர்கள்தான் கையடக்க கணினியைத் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து கையடக்க கணினியை பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரையும் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT