திருநெல்வேலி

தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்

திருநெல்வேலி நகர தமுமுக,  மமக சார்பில் திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

DIN


திருநெல்வேலி நகர தமுமுக,  மமக சார்பில் திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 
திருநெல்வேலி நகரத்தில் உள்ள 51, 52-ஆவது வார்டுகளில் உள்ள ஜவஹர்லால் தெரு, முகம்மது அலி தெரு, வழுக்கு ஓடை, ஜாமியா பள்ளிவாசல் தெரு, மாதா நடுத்தெரு, மாதா மேலத் தெரு, மாதா பூங்கொடிதெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதோடு,  அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு,  திருநெல்வேலி நகர தமுமுக, மமக தலைவர் கோல்டன் காஜா தலைமை வகித்தார்.  தமுமுக நகரச் செயலர் ஷபிக்,  மமக நகரச் செயலர் அப்துல்லா, பொருளாளர் நசீர், துணைத் தலைவர் சம்சுதீன்,  துணைச் செயலர் முகம்மது  யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக, மமக மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி தூய்மை பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
தமுமுக மாவட்டச் செயலர் அலிப் பிலால், மமக மாவட்டச் செயலர் ஜமால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT