திருநெல்வேலி

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது: வரிசையில் நின்று குளித்த சுற்றுலாப் பயணிகள்

DIN

குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை  தண்ணீர் குறைவாக விழுந்ததால் நீண்டவரிசையில் நின்று சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.
குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்களும் குற்றாலம் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசியது. எனினும், மலைப் பகுதியில் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிக்கவில்லை. பேரருவி, ஐந்தருவியில் மிகவும் குறைந்த அளவில் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்துச் சென்றனர்.  பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. புலியருவியில் தண்ணீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. அருவிகள் ஏமாற்றம் அளித்தாலும் சுற்றுலாப் பயணிகள் பூங்காக்களிலும், படகு சவாரியிலும் ஈடுபட்டு உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT