திருநெல்வேலி

பாளை. சிவன் கோயிலில் ஆடித் தவசு விழா: 5008 மாவிளக்குகளால் அம்பாளுக்கு பூஜை

DIN

ஆடித் தவசு விழாவை முன்னிட்டு, பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் 5008 மாவிளக்குகளால் பக்தர்கள் பூஜை செய்து அம்பாளை வழிபட்டனர்.
பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் ஆடித் தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. 
மாவிளக்கு தயார் செய்வதற்காக பச்சரிசி மாவு, வெல்லம், நெய் போன்றவற்றை பக்தர்கள் வழங்கினர். அதைக் கொண்டு அம்பாளுக்கு 5008 மாவிளக்குகள் தயார் செய்யப்பட்டன. மாலையில் அம்பாள் தவசுக் காட்சியில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு மாவிளக்கில் தீபம் ஏற்றி கொடுக்கப்பட்டது. தீபம் ஏற்றப்பட்ட மாவிளக்கை கொண்டு பக்தர்கள் தீபாராதனை காட்டி அம்பாளை வழிபட்டனர்.
தொடர்ந்து, கோமதி அம்பாள் மலர்பாவாடை அலங்காரத்திலும், சுவாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT