திருநெல்வேலி

"புதிய கல்விக் கொள்கை  சமூகநீதிக்கு எதிரானது'

DIN

புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளதால் அதைக் கைவிட வேண்டும் என்றார் ஆலங்குளம் பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தத் தவறியது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு பின்பும் அமல்படுத்தாத நிலையில் , திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற என் மீது உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்காக திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானோம். விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை வெளியிட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. சமூக நீதிக்கு எதிரானதாக அக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதை அமல்படுத்தக் கூடாது. உடனடியாக கைவிட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT