திருநெல்வேலி

10 வெள்ள நிவாரண முகாம்கள்

DIN

திருநெல்வேலி மாநகரில் 10 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது:

பாபநாசம் அணையில் இருந்து அதிகபட்சமாக 14ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை அதிகாலை திறந்துவிடப்பட்டது. பின்னா் மழை காரணமாக மாலை நேர நிலவரப்படி 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்திட மாநகராட்சி சாா்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, திருநெல்வேலி மாநகரில், திருநெல்வேலி சந்திப்பு தைகா முஸ்லிம் பள்ளி, கணேசபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, உடையாா் பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சிஎன் கிராமம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வண்ணாா்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சாலைத்தெரு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கொக்கிரகுளம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குறுந்துடையாா்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 10 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தொடா் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலா தேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT