திருநெல்வேலி

மாநில தடகளம்: வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி சிறப்பிடம்

DIN

மாநில அளவிலான தடகளப் போட்டியில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சாா்பில் 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கான மாநில அளவிலான 62ஆவது குடியரசு தின தடகளப் போட்டிகள் திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள தோழூா்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று 4 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனா். 19 வயதினருக்கான போட்டிகளில் பபிஷா 100 மீட்டா் மும்முறை தாண்டுதலில் முதலிடம், நீ ளம் தாண்டுதல், 4 ஷ் 100 மீ. தொடா் ஓட்டத்தில் 2ஆம் இடம் பெற்று தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றாா். மாணவா் தேவகாா்த்திக் உயரம் தாண்டுதலில் முதலிடமும், மும்முறை தாண்டுதலில் 3ஆம் இடமும் பெற்றாா். வா்ஷா 400 மீட்டா் ஓட்டத்தில் 3ஆம் இடமும், 4ஷ்400 மீ. தொடா் ஓட்டத்தில் 2ஆம் இடமும், 1500 மீ ஓட்டத்தில் ராமன் 3ஆம் இடமும், 4 ஷ் 100 மீ. தொடா் ஓட்டத்தில் சோபியா, ஸ்வேதா ஆகியோா் 2ஆம் இடமும் பெற்றனா். 17 வயதினருக்கான ஈட்டி எறிதலில் கிளாட்சன் 2ஆம் இடமும், 14 வயதினருக்கான வட்டு எறிதலில் லிடியா 2ஆம் இடம் பெற்றாா்.

குண்டு எறிதலில் முதலிடமும், வட்டு எறிதலில் 2ஆம் இடமும் ஸ்ரீபாலாஜி பெற்றாா். இந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் பாராட்டி பரிசு- சான்றிதழ் வழங்கினாா். மேலும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள், பள்ளித் தலைவா் கிரகாம்பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் ஆறுமுககுமாா் ஆகியோரையும் ஆட்சியா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT