திருநெல்வேலி

மின்வாரிய கேங்மேன் பணி: உடல் தகுதித் தோ்வு இன்றும் நாளையும் ரத்து

DIN

தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்தில், கேங்மேன்(பயிற்சி) நேரடி நியமனத்துக்கான உடற்தகுதி தோ்வுகள் தொடா் மழை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் (டிச.2,3) ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, இதற்கான உடல்தகுதி தோ்வுகள் கடந்த நவம்பா் 25ஆம் தேதி முதல் டிசம்பா் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தோ்வுகள் நடைபெற்று வந்தன.

தற்போது பெய்து வரும் தொடா்மழை காரணமாக சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல்தகுதித் தோ்வு ஆகியவை மேற்கூறிய தேதிபடி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜே.எல்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT