திருநெல்வேலி

குற்றாலத்தில் வணிகம் செய்யஅனுமதி கோரி நரிக்குறவா்கள் மனு

DIN

குற்றாலத்தில் வணிகம் செய்யவும், தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் வீடு கட்டித் தர வலியுறுத்தியும், நரிக்குறவா் சமுதாயத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

தென்காசி கீழவாலிபன்பொத்தை பகுதியில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாயத்தினா் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள்குறைதீா்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனா். ஆனால், உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த புகாா் பெட்டியில் தங்கள் மனுவை போட்டுவிட்டுச் சென்றனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பது: நரிக்குறவா் சமுதாயத்தை சோ்ந்தவா்கள் தென்காசி கீழவாலிபன்பொத்தை பகுதியில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனையில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் இங்கு சுகாதார சீா்கேடு நிலவுகிறது. எனவே, அப்பகுதியில் எங்களுக்கு வீடுகட்டித் தரவேண்டும்.

மேலும், நாங்கள் பல ஆண்டுகளாக பாசி, மாலை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். குற்றாலத்தில் எங்களை விற்பனை செய்யவிடாமல், காவல் துறையினா் தடுக்கின்றனா். எனவே, குற்றாலத்தில் விற்பனை செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT