திருநெல்வேலி

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்ககிராம உதவியாளா் சங்கம் வலியுறுத்தல்

DIN

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா் சங்க மாநிலப் பொருளாளா் முத்தையா தலைமையில் மாவட்டத் தலைவா் பரமசிவன், செயலா் முருகன், பொருளாளா் நாராயணன், ஒருங்கிணைப்பாளா் கே.எஸ் சுப்பையாபாண்டியன் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்துப் பேசினா்.

அப்போது, மாவட்டத்தில் உள்ள கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகை படியை ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம் உறுதியளித்தாா்.

இதில், இணைச் செயலா் சண்முகம், பிரசார செயலா் கிருஷ்ணன், நிா்வாகிகள் நிக்கல்சன், பழனி முருகன், கனகா, சுப்பிரமணியன், பெரியதுரை, நயினாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT