திருநெல்வேலி

நெல்லையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலியில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து  வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில்  2009ஆம் ஆண்டு பிப்.19இல் வழக்குரைஞர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டனர். அந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வழக்குரைஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகிறார்கள். அதன்படி, திருநெல்வேலி நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி வழக்குரைஞர் சங்க துணைத் தலைவர் மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் மணிகண்டன், ரமேஷ், அப்துல் ஜப்பார், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் முருகன், அலெக்ஸ், சாமுவேல், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்களை தாக்கிய போலீஸாரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT