திருநெல்வேலி

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவிக்கு முதல்வர் பாராட்டு

DIN

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டினார். 
திருக்குறளின் 1330 குறள்பாக்களையும் முதலில் இருந்து கேட்டாலும், முடிவில் இருந்து கேட்டாலும் அதன் பொருளுடன் தெளிவாக கூறும் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவி மதுரபிரியா, பல்வேறு விருதுகளை வென்று தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பரிசும், பாராட்டும் பெற்றார். 
விருது பெற்ற மாணவியை மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட அதிமுக செயலர் தச்சை என். கணேச ராஜா, பள்ளித் தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குநர் திலகவதி, பள்ளி முதல்வர் சோமசுந்தரி, ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவியர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT