திருநெல்வேலி

சாம்பவர்வடகரையில் குடிநீர் விநியோகம் சீராகியது

DIN

சாம்பவர்வடகரை பேரூராட்சியில் மின் மோட்டார் பழுதால் கடந்த 2 மாதமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மின்மோட்டார் சீரமைக்கப்பட்டு,  சீராக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
  சாம்பவர்வடகரை பேரூராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் மற்றும் உள்ளூர் நீராதாரத்தில் ரூ. 50 லட்சத்தில்  அனுமன் நதிக்கரையோரம் அமைக்கப்பட்ட கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்ப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த 2 மாதமாக மின்மோட்டார் பழுதால் உள்ளூர் நீராதாரம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது.
   இதனையடுத்து அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக பழுதான மின்மோட்டாரை சீரமைத்து,   செவ்வாய்க்கிழமை முதல் அனுமன் நதிக்கரையில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீரை பேரூராட்சி மக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT