திருநெல்வேலி

பாளை. அருகே வீட்டு பூட்டை உடைத்து திருட்டு

DIN

பாளையங்கோட்டை அருகே  பொதிகை நகரில் வீட்டு பூட்டை உடைத்து மர்மநபர்கள் பொருள்களை திருடிச் சென்றனர்.
பெருமாள்புரம் பொதிகை நகரைச் சேர்ந்த மகேந்திரன் மனைவி சரஸ்வதி (50). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இவர்,  சென்னையில் உள்ள இளைய மகன் தனராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார்.  
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை சரஸ்வதியின் வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல்
கொடுத்தனர்.
போலீஸார் சரஸ்வதியின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். இதில் அவருடைய வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலுள்ள
பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது.
இதையடுத்து விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடிச் சென்ற மர்மநபர்களின் தடயங்கள் ஏதாவது உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வீட்டின் உரிமையாளர் சென்னைக்கு
சென்றிருப்பதால் அவர் வந்த பிறகே கொள்ளை போன பொருள்கள் மற்றும் அவற்றின் மதிப்பு தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT