திருநெல்வேலி

சங்கரன்கோவில் திரெளபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சங்கரன்கோவில் திரெளபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

DIN


சங்கரன்கோவில் திரெளபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் செங்குந்தர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில்  பூக்குழித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கோயிலில் சுவாமி,  அம்பாளுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் அலங்கார,  ஆராதனைகள் நடைபெற்றன.
3ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு 8  மணிக்கு மாதாங்கோயில் தெருவில் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.  தொடர்ந்து இரவு 10 மணிக்கு  திருக்கல்யாணம்  நடைபெற்றது.
4 ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு 7 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெற்றது.  5ஆம்  திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கரகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனையும்,  இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT