திருநெல்வேலி

வாசுதேவநல்லூரில் மது விற்பனை: முன்னாள் ஊராட்சித் தலைவர் கைது

வாசுதேவநல்லூரில் சட்ட அனுமதியின்றி  மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டதாக, முன்னாள் ஊராட்சித் தலைவரைப் போலீஸார் கைது செய்தனர்.

DIN


வாசுதேவநல்லூரில் சட்ட அனுமதியின்றி  மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டதாக, முன்னாள் ஊராட்சித் தலைவரைப் போலீஸார் கைது செய்தனர்.
   வாசுதேவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரமூர்த்தி தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை ஆர்.சி. தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பாலம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில்,  அவர்,  திருமலாபுரம்,  காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் மாப்பிள்ளைத்துரை(57)என்பதும், மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது.  அதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 30 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.  கைதான மாப்பிள்ளைத்துரை, திருமலாபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT